கன்னியாகுமரி அருகே திருவட்டார் பகுதியில் வெள்ளிமலை, ஹிந்து தர்ம வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்கள் வித்யாஜோதி, வித்யாபூஷண் பட்டங்களை வழங்க உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை, ஹிந்து தர்ம வித்யாபீடம், 44-வது சமயவகுப்பு மாணவர் மாநாடு, 35-வது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா மற்றும் முதல் வித்யாபூஷண் பட்டமளிப்பு விழா வரும் செம்டம்பர் மாதம் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடத்தின் முதல் வித்யாபூஷண் பட்டமும் மாவட்ட முதல் பரிசும் பெற்று கிள்ளியூர் ஒன்றியத்திற்கு பெருமை சேர்க்கும் கிள்ளியூர் ஒன்றிய துணை அமைப்பாளர் வித்யாஜோதி.ரா.ரெஜிதா அதிபன்ராஜ் அவர்களுக்கு வெள்ளிமலை ஏகதர்மகர்த சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் அவர்கள் தலைமையில் 3 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வித்யாபூஷண் கேடயம் வழங்கி சிறப்பிக்கிறார். வித்யாபூஷண் பட்டம் பெற்று இந்து சமய பணிசிறக்க வாழ்த்துகிறோம். கிள்ளியூர் ஒன்றிய சமயவகுப்பு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
வெள்ளிமலை, ஹிந்து தர்ம வித்யாபீடம், முதல் வித்யாபூஷண் பட்டம் பெறும் வித்யாஜோதி.ரா.ரெஜிதா அதிபன்ராஜ்
Discussion about this post