சென்னை சாம்சுங் தொழிற்சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஒரு குழப்பம் நிலவுகின்றது, அதாவது அவர்கள் வழக்கமான கம்யூனிச கொள்கைபடி தொழிற்சங்கம், போராட்டம், தொழிலாளர் நிதி, ஒற்றுமை அதாவது கம்பெனி நடத்துவதே எங்களுக்காக, எங்களுக்கு பலனில்லாத கம்பெனி நடத்த கூடாது எனும் கொள்கையினை பிடித்து அதை போராட்டமாக மாற்றுவதால் வந்த குழப்பம் இது
ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன, இன்னொரு பக்கம் போராட்டம் வழக்கு என பல விஷயங்கள் நடக்கின்றன
இங்கு கவனிக்கவேண்டிய விஷயம், நோக்கியா சாம்சுங் போன்றவை எல்லாம் அந்நிய நாட்டு நிறுவனங்கள்,
அவர்கள் ஒன்றும் சேவை செய்ய வந்த காஞ்சிமடம் அல்ல
இங்கு அவர்கள் தொழில் செய்ய வந்தவர்கள் அதனால் இங்கே வேலைவாய்ப்பு கிடைக்கும் அரசுக்கு வருமானம் பெருகும் அதுதான் விஷயம் அதை தாண்டி சொல்ல ஒன்றுமில்லை, வேலை செய்ய விரும்பினால் செய்யலாம் இல்லை என்றால் இன்னொருவருக்கு வழிவிட்டு கிளம்பலாம்
இது மக்களுக்கு வேலைவாய்ப்பு அரசுக்கு வருமானம் என பார்க்கபடவேண்டிய விஷயம்
இன்னும் ஆழமாக சொல்லவேண்டுமென்றால் இவை எல்லாம் சீனாவில் இருந்த நிறுவனங்கள், சீன அமெரிக்க மோதலில் அமெரிக்காவின் மூலபொருட்களுக்கு தடைவிழும் என்பதால் இந்தியாவுக்கு வந்தவை
இங்கே அவை வந்ததால் வேலை பெருகிற்று , உற்பத்தி ஏற்றுமதி அரச வருமானம் என எல்லாம் பெருகிற்று
சரி, இந்த கம்யூனிச கும்பல் இப்படி குழப்பியடித்து நிலமை விபரீதமாகி ஸ்டெர்லைட் போல முடிவு வந்தால் என்னாகும்?
இங்கே வாய்ப்பில்லை என்றால் இன்னொரு நாட்டுக்கு நிறுவனம் செல்லும் ஏன் அது சீனாவாக கூட இருக்கலாம், அங்கே தொழிற்சங்கம், மார்க்ஸ், கம்யூனிசம், உரிமை என பேசினால் நசுக்கிவிடுவார்கள்
ஆக தமிழக கம்யூனிஸ்டுகளின் நோக்கம் இந்திய தேசம் தொழில்வளர்ச்சி அடைய கூடாது உருப்பட கூடாது,மாறாக இந்த கம்பெனிகளால் இன்னொரு தேசம் வளரட்டும் இந்தியா பின்னடையட்டும் என்பது
இந்த தேசவிரோத கொள்கைக்கு பெயர் கம்யூனிசம்
சரி, இதுகாலம் அமைதியாக இருந்த தமிழக கம்யூனிஸ்டுகள் இப்போது அதாவது உதயநிதி துணைமுதல்வராகி கட்சியினை கையில் எடுத்து அதன் கூட்டணிகள் சலசலக்கும் நேரம் ஏன் பொங்கவேண்டும்?
தேர்ந்தல் நெருங்கும் நேரம் இப்படித்தான் பலமொழிகளில் பேசி அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் அதெல்லாம் அரசுக்கும் அதை நடத்தும் கட்சிக்குத்தான் புரியும்
ஒரே ஆறுதல் என்னவென்றால் ஏதும் சிக்கல் என்றால் இந்த ஆலைகள் நிச்சயம் இந்தியாவை விட்டு செல்லாது மாறாக தமிழகத்தை விட்டு வெளியேறினால் உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் அசாம் குஜராத் என பாஜக அரசுகள் வரவேற்க தயாராக இருக்கின்றன என்பதால் சிக்கல் இல்லை, நஷ்டம் தமிழகத்துக்கே
ஆக மூடப்பட்ட போர்டு ஆலையினை மீள திறக்கின்றோம் என அமெரிக்காவில் இருந்தே அய்யா ஸ்டாலினார் முரசடித்து வந்த நேரம் இந்த ஆலையின் சிக்கலை கண்டபின் இனி போர்டு ஆலை இப்பக்கம் வருமா என்பது கேள்விக்குறி.
ஆக அய்யா ஸ்டாலினாருக்கும் அவர் முரசுக்கும் சோதனையான காலகட்டம் இது
கம்யூனிஸ்டுகள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்?
வேறு ஒன்றுமில்லை அய்யா ராம்சாமியினை சந்திக்காமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்ட்டாக மாறியிருப்பேன் என அடிக்கடி சொன்னவர் அய்யா கருணாநிதி, அப்படியான கொள்கை எப்படி இருக்கும்?
இப்படித்தான் இருக்கும்.
சென்னை சாம்சுங் தொழிற்சங்கம், போராட்டம்… தேசவிரோத கொள்கைக்கு பெயர் கம்யூனிசம்… AthibAn Tv
Discussion about this post