மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து சென்னை பட்டாசு முகவர்கள் நல சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு தொடர்பாக சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post