கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த “டானா” புயல், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 11.30 மணியளவில் மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. . இது மேலும் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே, பிடர்கனிகா மற்றும் தாமரா அருகே இன்று காலை கடுமையான புயலாக கரையைக் கடந்தது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று (25.10.2024) புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.
அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்யாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று விடப்பட்ட கனமழை எச்சரிக்கை காரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அகோக் மீனா உத்தரவு பிறப்பித்தார்.
கன்யாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோதையாறு, மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கொளஞ்சிமடம் பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் மறுபுறம் தவித்தனர். அவர்களை அப்பகுதி பழங்குடியினர் மீட்டனர்.
இன்று விடப்பட்ட கனமழை எச்சரிக்கை காரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அகோக் மீனா உத்தரவு பிறப்பித்தார்.