கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கார்த்திகை மாத சமுத்திர தீர்த்த ஆரத்தி வழிபாடு திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

காசி, ராமேஸ்வரம் போன்ற கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆரத்தி வழிபாடு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஆரத்தி வழிபாடு நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட இந்து யாத்திரை பேரவை சார்பில் நடைபெறும் இந்த ஆரத்தி வழிபாட்டின் 3வது நிகழ்ச்சி கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (18ம் தேதி) இரவு நடந்தது. முக்கடல் சங்கம் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் முன் முதல் பக்தர்கள் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து மூன்று முறை கோஷமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சமுத்திர அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஐந்து அடுக்கு தீபம் ஏற்றி ஆரத்தி கடலை நோக்கி கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது. மகா சமுத்திர ஆரத்தி வழிபாட்டிற்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி ஆகியோர் விளக்கேற்றி ஆரத்தி வழிபாட்டை தொடங்கி வைத்தனர்.

குமரி மாவட்ட இந்து சீர்திருத்த பேரவை தலைவர் ராஜகோபால், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், முக்கடல் சங்கம மகா சமுத்திர ஆரத்தி வழிபாட்டில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கன்னியாகுமரிக்கு வந்திருந்த பிற மாவட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here