கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உச்சியில் அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிழா நவ.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று (நவ., 19) அதிகாலை 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமூலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.

அண்ணாமலையார் மூல சன்னதியில், சிவாச்சாரியார்கள் வேதம் ஓதி, வேத மந்திரங்கள் முழங்க, நெய்த தீபம் ஏற்றினர். அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு, முதல் பிரகாரத்தில் வலம் வந்தது.

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து கோயிலில் அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின் ஐந்து அகல்களும், கொடி மரத்தின் முன்புறம், மாடவீதியில் ஒன்றாக இணைக்கப்பட்டன; பின்னர், ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு மலை உச்சியில் உள்ளவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த விளக்கு, தொடர்ந்து, 10 நாட்கள் எரிகிறது. இது அருகில், 40 கி.மீ., தூரம் வரை தெரியும். கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, தங்கக் கொடிமரம், மின்விளக்கு மண்டபம் என, கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தீபத்திருவிழாவின் போது 20,000 பக்தர்கள் கரோனா விதிகளை பின்பற்றலாம் என்றும், பங்கேற்பாளர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here