டிராவல்ஸ் நிறுவனம் என்ற பெயரில் போலி இணையதளம் ஒன்றைத் தொடங்கி பணமோசடியில் ஈடுபட்ட நபர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதை சைபர் கிரைம் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல தனியார் டிராவல்ஸ் நிறுவனம் பெயரில் சிலர் போலி இணையதளம் தொடங்கி, அதை பயன்படுத்தி பல வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்தது சமீபத்தில் தெரியவந்தது. புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் விசாரணையில், தேவராஜ் சிங் மற்றும் ஷ்ரவன் சிங் ஆகிய இரு குற்றவாளிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தேவராஜ் சிங்கின் தம்பி திலீப் சிங் என்பதும், அவர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட திலீப் சிங் தாய்லாந்தில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல டிராவல்ஸ் நிறுவனம் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, டூர் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்தவர்களை ஏமாற்றி தேவராஜ் சிங், ஷ்ரவன் சிங் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் போலி இணையத்தளத்தில் பதிவு செய்த நபர்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here