இந்தியா-இலங்கை படகு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவது குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அரசுமுறை பயணமாக இன்று (நவ.23) புதுச்சேரி வந்தார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கவுரவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் அவர் சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான சுமூகமான உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

மீனவர்களின் உயிர், உடமை பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் மீனவர்கள் பிரச்சனையை அணுக வேண்டும் என துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரி, மீனவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றார்.

காரைக்கால்-இலங்கை இடையே படகு சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும், இந்தியா-இலங்கை இடையே படகு-ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்துவது குறித்தும் துணைநிலை ஆளுநர் விவாதித்தார்.

மேலும், 21 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது குறித்தும் கேட்டறிந்தார். இரண்டு மீனவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த கோபால் பாக்லே, முதல்வர் ரங்கசாமியை முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here