தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க மோடிதான் காரணம் என பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜக மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், சென்னை புறநகர் மாவட்ட அதிமுக ஐ.டி. கோட்ட தலைவர் பிரவீன்குமார், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் துரைபாண்டி, கடலூர் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன், தமிழக இளைஞரணி நிறுவனர் பொதுச்செயலாளர் ராஜசேகர், சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம், “இந்தியாவை வல்லரசாக மாற்றும் பிரதமரின் மீதுள்ள பற்றுதலாலும், தவறுகளைச் சுட்டிக்காட்டியதற்காக பா.ஜ.க.வுடன் இணைந்திருப்பதாலும் அக்கட்சியில் இணைந்துள்ளேன்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதில் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய மோடியின் பங்கு உள்ளது. ஜல்லிக்கட்டு, முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட விவகாரங்களில் மோடி சிறந்து விளங்கினார்.

பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நேசிக்கப்படுபவர். ஜெயலலிதாவின் ஆசியுடன் அவரது தலைமையை ஏற்கிறேன் என்றார் மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here