அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் போஸ்கோவில் (நவ.24) கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதற்காக தலைமையாசிரியரும் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உடையார்பாளையம் அடுத்த பிலிச்சுக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (35) தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தலைமையாசிரியை ராஜேஸ்வரியிடம் (53) மாணவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாணவியையும், தமிழாசிரியரையும் அழைத்துப் பேசிய ராஜேஸ்வரி, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இச்சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூர் டிஎஸ்பி மதன் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற அருள்செல்வன் போஸ்கோ, தலைமையாசிரியர் ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில், கடந்த மாதம் இதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

மேலும், பள்ளியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் ஆகியோர் கண்காணித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here