செங்கடல் வழியாக சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்கு கப்பலை ஹவுதி பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்கியுள்ளனர்.
காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு ஹமாஸ் படைகளுக்கு இடையே 7 மாதங்களுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில், ஹமாஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஹவுதி போராளிகள், முக்கியமான செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த லைபீரியக் கொடியுடன் சரக்குக் கப்பலை ஹவுதி போராளிகள் குண்டுவீசித் தாக்கி, கப்பலை மூழ்கடித்தனர். அதிலிருந்து சரக்கு மற்றும் எண்ணெய் கடலில் கொட்டியது.
இந்த தாக்குதலில் கப்பலின் மாலுமி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.