பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலகமே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார். இவர் சிறப்புரை ஆற்றிய போது பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை ஐஐடியின் 61வது பட்டமளிப்பு விழா இன்று ஐஐடி வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. 2012ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற உயிர்வேதியியல் விஞ்ஞானி பிரையன் கே.கோபில்கா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,236 மாணவர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 3,016 பட்டங்கள் வழங்கப்பட்டன. 444 பேர் Ph.D. இந்த பட்டமளிப்பு விழாவில் தான் தங்கப்பதக்கம் வென்ற மாணவர் தனஜெய் பாலகிருஷ்ணன் இஸ்ரேல் பற்றி பேசினார்.
“பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடக்கிறது, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் போரை நடத்தக்கூடிய நாடுகளுக்கு உதவுகின்றன.
இது செயலுக்கான நேரம். பாலஸ்தீனத்தில் பாரிய இனப்படுகொலை நடக்கிறது. மக்கள் பெருமளவில் இறக்கின்றனர். இதற்கு தெளிவான முடிவு இல்லை. இதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
பொறியியல் மாணவர்களாகிய நாங்கள் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் மட்ட வேலைகளைப் பெற கடுமையாக உழைக்கிறோம். நல்ல சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்காக இதைச் செய்கிறோம். இந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரும்பாலானவை பாலஸ்தீன மோதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. பாலஸ்தீனியர்களைக் கொல்வதற்கான தொழில்நுட்பத்தை அவர்கள் வழங்குகிறார்கள்.
இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெரியும். பொறியியல் பட்டதாரிகளாகிய நாம் செய்யும் செயல்களின் விளைவுகள் நமக்குத் தெரியும். STEM பின்னணியில் இருந்து பெரிய நிறுவனங்களுக்குச் செல்லும் நாம் சாதி, வர்க்கம், மதம், பாலினம் ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய வேண்டும். இது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” என்றார்.
பின்னணி: பாலஸ்தீனத்தின் காசா பகுதி, 2007ல் இருந்து, இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பாலஸ்தீன விடுதலை அமைப்பான, ஹமாஸ், கடந்த ஆண்டு, அக்டோபர், 7ல், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் நடத்தும் தற்போதைய போரின் தொடக்கப் புள்ளி இதுதான். ஹமாஸை அழிப்பதே தனது முதன்மையான நோக்கம் என்ற கோஷத்துடன் இஸ்ரேல் போரைத் தொடங்கியது.
போரில் இதுவரை 37,000க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது காசான் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதம் ஆகும். அதேபோன்று 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரில் படுகாயமடைந்தனர். யுத்தம் காரணமாக 23 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினி மற்றும் தொற்று நோய்கள் அவர்களைத் தொடர்கின்றன. காசா பகுதி கிட்டத்தட்ட தரைமட்டமாகிவிட்டது.
ஐயோ! உங்களிடம் இணைய இணைப்பு இல்லை.
உங்கள் நெட்வொர்க் இணைப்பைச் சரிபார்த்து, மீண்டும் முயற்சிக்கவும்.
போர் தொடங்கி 269 நாட்களுக்குப் பிறகு, இந்தப் போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பதில் அளித்துள்ளார். “ஹமாஸ் ஒரு சித்தாந்தம், ஹமாஸ் ஒரு கட்சி, அது மக்களின் இதயங்களில் வேரூன்றியுள்ளது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று அவர் கூறினார்.
போர் தொடங்கி 8 மாதங்களுக்குப் பிறகு இதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஹமாஸின் சுரங்கப்பாதைகளையும், அதன் உயர்மட்ட போராளிகளையும், தலைவரையும் அழித்து, தாங்கள் வைத்திருந்த 240க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் 8 மாதங்களுக்குப் பிறகும் இஸ்ரேலால் இந்த இலக்கை அடைய முடியவில்லை.
Discussion about this post