தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் மிகப்பெரிய இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் மிகப்பெரிய இந்து கோயில் மற்றும் கலாச்சார வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மஹந்த் சுவாமி மகாராஜின் தலைமையில் திறக்கப்பட்ட இந்தக் கோயில், கலை, நடனம், மொழி மற்றும் நம்பிக்கையின் காட்சிப்படுத்தலாகும்.
பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கோயில் திறப்பு விழா மற்றும் சிறப்பு பூஜையில் ஏராளமான இந்து ஆன்மீகவாதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post