WhatsApp Channel
10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா மற்றும் இத்தாலி இடையே நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
ஆப்பிரிக்க நாடான லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி. கடந்த 2011ம் ஆண்டு அங்குள்ள கிளர்ச்சியாளர்களால் சர்வாதிகாரி படுகொலை செய்யப்பட்டார்.இதையடுத்து இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் லிபியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தன.
இந்நிலையில் லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி ஏர்வேஸ் மூலம் இத்தாலிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள மிட்டிகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் ஃபியூமிசினோ விமான நிலையத்துக்கு எம்.டி-522 என்ற விமானம் இயக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதற்கு லிபியப் பிரதமர் அப்துல் ஹமீத் திபேபா தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
Discussion about this post