WhatsApp Channel
இஸ்ரேலின் தற்காப்பு உரிமை மறுக்க முடியாதது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 250 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 779 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில், இந்த பயங்கரவாத தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் நிதியுதவி செய்பவர்கள் உலகிற்கு எதிராக குற்றம் செய்கிறார்கள் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமை மறுக்க முடியாதது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.
5 இஸ்ரேல் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றதாக பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இதற்கு இஸ்ரேல் பதில் அளிக்கவில்லை. இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Discussion about this post