WhatsApp Channel
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தின் வடமேற்கில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 முதல் 6.3 ரிக்டர் அளவில் தொடர்ந்து 8 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர் நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயரமான கட்டிடங்களில் இருந்து அலறியடித்துக்கொண்டு ஓடி தெருவில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கோரியான், சிந்த ஜன் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள 12 கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளதாகவும், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post