உலகில் முதன்முறையாக முழுமையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்ட ஒரு அவுஸ்திரேலியர், மருத்துவ வரலாற்றில் புதிய ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயது நபர், செயற்கை இதயத்தைப் பெற்றுவரும் முதல் அவுஸ்திரேலியராக தன்னை முன்வைத்து இந்தப் பரிசோதனைக்கு உட்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அவருக்கு இந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்த நிலையில், பெப்ரவரி மாதத்தில் வீடு திரும்பியுள்ளார். மேலும், மார்ச் மாத தொடக்கத்தில் மாற்று இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, BIVACOR எனப்படும் சாதனத்துடன் 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்துள்ள அவர், இதன் மூலம் மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தச் சிறப்பு அறுவை சிகிச்சையை சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் போல் ஜோன்ஸ் தலைமையில் ஒரு குழு மிகுந்த திறமைக்கூடிய முறையில் மேற்கொண்டது.
அவ்வகையில், இந்த மருத்துவ முன்னேற்றம், அவுஸ்திரேலியாவின் மருத்துவ வளர்ச்சியில் ஒரு வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்வாகும் என டாக்டர் ஜோன்ஸ் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இத்தகைய செயற்கை இதயத்தின் பயன்பாடு, இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த மாற்று சிகிச்சையாக அமையும். மேலும், எதிர்வரும் 10 ஆண்டுகளில், இதய தானத்துக்காக நீண்ட காலம் காத்திருக்க நேரிடும் நோயாளிகளுக்கு இதுவொரு முக்கியமான வாழ்க்கை ரீதியான தீர்வாக அமையும் என இதய நோய் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட் தெரிவித்துள்ளார்.