WhatsApp Channel
கடந்த 7ஆம் தேதி காஸா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய கிராமம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் இன்று 6வது நாளாக நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காசா பகுதியை ஒட்டிய இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்து பதிலடி கொடுத்துள்ளது. ஹமாஸால் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றியது. காசா மீதான வான்வழித் தாக்குதலையும் அது தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேல் கிராமமான கபார் ஆசாவில் கடந்த 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 40 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல், கூடுதல் ராணுவ வீரர்களை எல்லைக்கு வரவழைத்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது, அங்குள்ள நிலைமை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. அங்கு நடந்த கொடூர கொலைகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
இதுவரை 40 குழந்தைகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் மீட்டுள்ளனர். சில குழந்தைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டதாகவும், முழு குடும்பங்களும் படுக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
“இது போர் அல்ல, போர்க்களம் அல்ல… ஆனால் இது ஒரு படுகொலை” என்று இஸ்ரேலிய ராணுவ மேஜர் ஜெனரல் விமர்சித்துள்ளார்.
கடந்த 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 2600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post