WhatsApp Channel
காசா மீது குண்டுவீசி 20 நாட்கள்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், தரை, கடல், வான் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றனர். 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஹமாஸால் பிடிக்கப்பட்டு காசா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் தொடுத்ததோடு, காசா மீது வான்வழித் தாக்குதலையும் நடத்தியது. அதன்படி கடந்த 20 நாட்களாக காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
Discussion about this post