WhatsApp Channel
22 நாள் போர்: காசாவில் இஸ்ரேலியப் படைகளுடன் போரிடுவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் இன்று 22வது நாளை எட்டியுள்ளது. ஐ.நா.வும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் போரை நிறுத்துவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் ஹமாஸ் முற்றாக ஒழிக்கப்படும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஸா மீது 21 நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்த தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அவ்வப்போது பீரங்கிகளும், ராணுவ வீரர்களும் காஸாவுக்குள் அனுப்பப்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக காஸாவுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய பீரங்கி, வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளைத் தாக்கிவிட்டு மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குத் திரும்பியது.
இந்நிலையில் நேற்று மீண்டும் காஸாவில் தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் ஆதரவுடன் இஸ்ரேலிய பீரங்கி காஸாவுக்குள் நுழைந்து காசாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹமாஸ் நிலைகளைத் தாக்கியது.
இந்த தாக்குதலில் காசா தரப்பில் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதே சமயம், தாக்குதல் நடத்திவிட்டு ராணுவம் எந்தவித சேதமும் இன்றி எல்லைக்கு திரும்பியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தரைவழித் தாக்குதலுக்கு விரைவாகத் தயாராகும் அதே வேளையில், காஸா மீதான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் படைகளுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post