உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியது: “பூரணமாகவும், எந்தவிதமான நிபந்தனைகளுமில்லாமல் போரினை நிறைவு செய்ய ரஷ்யா முன்வர வேண்டும்” என்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, உக்ரைன் நெட்டோவில் சேர்வதற்கான முயற்சியை எதிர்த்து, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. இதனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நிலவி வருகிறது. இதுவரை பல சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
இதேவேளை, அமைதிக்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில், இன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் கலந்து கொள்ளும் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலாக செயற்படுவார் என ஜெலென்ஸ்கி கூறினார். மேலும், “எங்கள் சுதந்திரம், அரசு மற்றும் மக்களை பாதுகாக்க நாங்கள் தேவையான அனைத்தையும் செய்கிறோம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து மேலும் அவர் கூறியதாவது:
“நாங்கள் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை தொடர்ந்து முன்வைக்கின்றோம். இது நீடித்த, நம்பகமான மற்றும் கண்ணியமான அமைதிக்கு வழிவகுக்கும். இந்தக் கோரிக்கைக்கான எங்கள் திட்டம் தர்க்கரீதியானதும் நடைமுறைசார்ந்ததுமாக உள்ளது.
ஆனால், ரஷ்யா தனது அமைதி யோசனைகளை இதுவரை எங்களோ, துருக்கியோ அல்லது அமெரிக்காவோடு பகிர்ந்துகொள்ளவில்லை. இருப்பினும், அமைதி நோக்கிய பாதையில் சில முன்னேற்றங்களை எட்ட முயற்சிக்கிறோம்.
உலக நாடுகள் அனைத்தும் உண்மையான போர்நிறுத்தம் வேண்டுமென விரும்புகின்றன. ரஷ்யா, தன்னுடைய இரட்டைப் போக்கை நிறுத்தி, போரை முடிக்கத் தயாராக இருக்க வேண்டும். எல்லோரும் ஒரு உறுதியான அமைதியை விரும்புகிறார்கள் – அதற்காக ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும்.
அமைதிப் பேச்சுவார்த்தையின் கட்டமைப்பாக இதுவே அமைய வேண்டும். நாங்கள் ஏற்கனவே எங்கள் திட்டங்களை முன்வைத்துள்ளோம். மேலும், அமெரிக்காவிடமிருந்து பொருளாதார தடைகளைத் தீர்க்கும் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகிறோம். இது அமைதி நோக்கி பயணிக்க உதவும்” என்றார் ஜெலென்ஸ்கி.
இதற்கிடையில், உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை உக்ரைன் பாதுகாப்புத் துறையிலுள்ள ஒரு உயர் அதிகாரி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, “ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பெலாயா விமானத் தளத்தையும், மற்ற விமான நிலையங்களையும் குறிவைத்த ட்ரோன் தாக்குதலில், 41 குண்டு வீச்சு விமானங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல், உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரடியாக கண்காணித்தார்” என்று தெரிவித்தார் அந்த அதிகாரி.
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா உக்ரைனின் ஒரு ராணுவ பிரிவை தாக்கியதாக கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யா பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு எதிராக இயக்கியதாகவும், அந்த தாக்குதலில் குறைந்தது 12 உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், மேலும் 60 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.