சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவின் கன்சு மாகாணத்தில் ஜின்சங் பகுதியில் ரயில்வே ஊழியர்களின் மீது அவ்வழியாக சென்ற பயணியர் ரயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 ஊழியர்கள் பலியானார்கள். தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உரும்கி நகரிலிருந்து ஹாங்கோவுக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post