இந்தியா-பாகிஸ்தான் மோதல் காலத்தில் ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” – டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்

“இந்தியா-பாகிஸ்தான் மோதல் காலத்தில் ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” – டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் ராணுவ மோதலில் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில், அமெரிக்கா ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு கீழே விழ்த்தியதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்களுக்கான இரவு விருந்தில் உரையாற்றிய ட்ரம்ப், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அப்போது 4 அல்லது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனது நினைவில், 5 ஜெட் விமானங்கள் அமெரிக்காவால் தரைதட்டப்பட்டன. நிலைமை மோசமாகிக் கொண்டே இருந்தது, அதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என தெரிவித்தார்.

மேலும், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர தயங்கினர். ஆனால், நாங்கள் வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தினோம். ‘நீங்கள் அணு ஆயுதங்கள் உட்பட யுத்த ஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால், உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டோம்’ என நாங்கள் நேரடியாக எச்சரித்தோம். ஏனெனில், இரண்டும் அணு சக்தி கொண்ட நாடுகள் என்பதே முக்கியமான காரணம்,” என்றார்.

“எங்களுக்கு முன்னிருந்த எட்டு ஆண்டுகளில் எந்த ஒரு நிர்வாகமும் செய்ய முடியாததை, நாங்கள் வெறும் ஆறு மாதங்களில் செய்து முடித்தோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். பல கடுமையான போர்களை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்,” எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு கொண்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலாக, மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டுப் பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வான்வழி தாக்குதல்களை நடத்தி, 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானும் தன்னுடைய ராணுவம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாட்டு இடையே நிலவும் போர் சூழ்நிலை மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பதற்றமான சூழ்நிலையில், இந்தியாவின் தாக்குதல்களால் பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் பெரிதும் சேதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது டிஜிஎம்ஓவின் மூலம் இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்தது. இந்திய டிஜிஎம்ஓவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, இந்தியா போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த அமைதிக்கான முயற்சி அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்டதென அந்நாட்டு நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்துவந்தது. ஆனால், இந்தியா இதனை நிராகரித்து வந்தது.

இந்த சூழலில், டொனால்ட் ட்ரம்ப் “அந்த நேரத்தில் அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அந்த விமானங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது குறித்து அவர் தெளிவாக எதுவும் கூறவில்லை. அதனால், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது இந்தியா, பாகிஸ்தான் அல்லது வேறு நாடா என்பது இன்னும் பரஸ்பர விளக்கத்துக்கு உட்பட்டதே.

Facebook Comments Box