தெற்கு ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தாகெஸ்தானில் உள்ள யூத தேவாலயங்கள் மற்றும் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸ் அதிகாரிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தாகெஸ்தான் ரஷ்ய கூட்டமைப்பின் 21 குடியரசுகளில் ஒன்றாகும். கடந்த 20 ஆண்டுகளில், வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் ஐந்து முக்கிய மாகாணங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட தாகெஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
பல ஆண்டுகளாக ஜிஹாத் என்ற பெயரில் வன்முறை கிளர்ச்சிகளை சந்தித்து வரும் செச்சினியாவின் (செச்னியா) எல்லையில், தாகெஸ்தான் பகுதி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் அதிகார மையமாக உள்ளது.
Caucasian மற்றும் ISIS இரண்டும் ரஷ்யாவில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளாகும். எனவே, இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ரஷ்ய சட்ட அமலாக்க முகவர், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க முகவர், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது அடிக்கடி பல கொடிய தாக்குதல்களை நடத்துகின்றனர்.
தாகெஸ்தானில், பெரும்பாலான மக்கள் உள்ளூர் மரபுகளை உள்ளடக்கிய சூஃபிசம் என்ற இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். அதே தாகெஸ்தானில், தீவிர இஸ்லாத்தின் ஒரு வடிவமான சலாஃபிசம் என்ற கடுமையான இஸ்லாமிய பாரம்பரியம் ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே அடிக்கடி வன்முறை தாக்குதல்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் தாகெஸ்தானில் உள்ள யூத தேவாலயத்திற்குள் மூன்று இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் பாதிரியார் உட்பட 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேவாலயத்தின் பிரார்த்தனை மண்டபம் தீப்பிடித்து எரிந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, மாஸ்கோவில் உள்ள இசைக் கூடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 135க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோது, FSB, ரஷியன் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், தாகெஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவை ஆகியவை பல சோதனைகளை நடத்தி பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தின.
மீண்டும், இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்குவதைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ரஷ்ய அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Discussion about this post