கென்யாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சகோதரி அவுமா ஒபாமா மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
கென்யா தலைநகர் நைரோபியில், கூடுதல் வரிவிதிப்பு நிதி மசோதாவுக்கு எதிராக குடிமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் ஒபாமாவின் சகோதரி ஆமா ஒபாமாவும் கலந்து கொண்டார். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததில் ஆமா ஒபாமா காயமடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தை காண சென்ற போது, போலீசார் தாக்கியதாக கூறினார்.
Discussion about this post