அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான விவாதத்தில் ஜோ பிடனும், டொனால்ட் டிரம்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பிடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலின் முக்கிய அம்சம் என்னவென்றால், பல்வேறு கட்டங்களில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்துவது. அதன்படி முதல் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி 90 நிமிடங்கள் நடைபெற்றது. ஜோ பிடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேருக்கு நேர் கலந்துரையாடினர்.
பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து நடந்த விவாதத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர். ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை போர் குற்றவாளி என பைன் விமர்சித்தார்.
மேலும், அமெரிக்காவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவது, கருக்கலைப்பு விவகாரம், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது போன்ற விவகாரங்களில் அரசின் தவறுகளை டிரம்ப் விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தின் போது, பிடென் திணறிய நிலையில், டிரம்ப் பெரும்பாலான நேரங்களில் ஆதிக்கம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post