ஜனநாயக நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றிவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ். டிரம்ப் புராஜெக்ட் 2025 என்ற ஒன்றை உருவாக்குகிறார் என்றும் அது அமெரிக்க ஜனநாயகத்தை அழித்துவிடும் என்றும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அங்கு, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கமலா ஹாரிஸ்: அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய வம்சாவளியினர் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த போலியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் நமது ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார் என்று அவர் மேலும் கூறினார். உலகின் பழம்பெரும் ஜனநாயகத்தை அழிக்கவே இப்படி செய்கிறார்.
டிரம்ப் ஆலோசகர்கள் 900 பக்க வரைபடத்தை தயாரித்துள்ளனர். அதன் பெயர் புராஜெக்ட் 2025.. டிரம்ப் 2வது முறையாக அதிபராக வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று விளக்கியுள்ளனர். குறிப்பாக நமது தொழிலாள வர்க்கத்திற்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் இன்சுலின் விலையில் உள்ள கட்டுப்பாட்டை நீக்கவும் முடிவு செய்துள்ளனர். கல்வி அமைச்சை முற்றாக மூடவும் தீர்மானித்துள்ளனர்.
பெண்கள் மீதான தாக்குதல்: அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் அல்லது ஒப்புதல் இல்லாமல் கருக்கலைப்பைத் தடைசெய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டம் நமது சட்டம் உத்தரவாதம் அளிக்கும் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
மீண்டும் சொல்கிறேன். டிரம்பிற்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர் நாடு முழுவதும் கருக்கலைப்பு தடையை அறிமுகப்படுத்துவார். ஆனால், அதை நாம் அனுமதிக்கக் கூடாது. பெண்களுக்குத் தாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு. என்பதை அரசு சொல்லத் தேவையில்லை. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
அம்மா: என் அம்மா 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தார். அவர்கள் அக்காலத்தில் சிவில் உரிமைப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். சிறுவயதில் இதுபோன்ற போராட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
என் அம்மாவின் வாழ்க்கையில் இரண்டு லட்சியங்கள் இருந்தன. ஒன்று என்னையும் என் தங்கையையும் நன்றாக வளர்ப்பது.. இரண்டாவது மார்பக புற்றுநோயை ஒழிப்பது. அவர் மார்பக புற்றுநோயை தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். அவர் தனது கனவுகளைத் தொடர யாரிடமும் அனுமதி கேட்டதில்லை. அப்பாவிடமும் கேட்கவில்லை.
என் அம்மா ஐந்தடி உயரம். ஆனால் நீங்கள் அவளை சந்தித்திருந்தால், நீங்கள் பயப்படுவீர்கள்.
முக்கியமான தேர்தல்: இது நம் வாழ்நாளில் மிக முக்கியமான தேர்தல். இன்னும் 120 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க மக்களின் வரலாற்றில் இது மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவைக் காப்பாற்றவும் அமெரிக்க மக்களைக் காப்பாற்றவும் சரியான நபருக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
Discussion about this post