வங்கதேசத்தில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் இறுதியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 105 பேர் பலியாகியுள்ளதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கலவரத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post