தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை வங்கதேச உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, ஷேக் ஹசீனா அரசாங்கம் 2018 இல் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இதை எதிர்த்து வங்கதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்புகள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தத் தொடங்கின. வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, 93 சதவீத காலி பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று கூறியது.
Discussion about this post