துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை மிசிசிப்பி போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
மிசிசிப்பியின் இண்டியோலாவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட்டில் உள்ள இரவு விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்தது. கிளப் வாசலில் பலர் நின்று கொண்டிருந்த போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குண்டுகள் பாய்ந்த 16 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிசிசிப்பி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post