தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அதன் மறு ஒருங்கிணைப்பை நாடுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான், 1949ல் சுதந்திர நாடாக மாறியது.ஆனால், தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கருதும் சீனா, மீண்டும் அதனுடன் சேர ஆர்வமாக உள்ளது. இதன் காரணமாக தைவான் எல்லைக்கு போர்க்கப்பல்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தைவானுடன் வேறு எந்த நாடுகளும் உத்தியோகபூர்வ உறவுகளைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் தைவானில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சீனா கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் தைவான் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Discussion about this post