பங்களாதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக டாக்கா அரண்மனையில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா புறப்பட்டு இந்தியா வந்தார்.
வங்கதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு சூறையாடினர்.
ரயில் சேவை ரத்து
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
சுட வேண்டாம்
போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வங்காளதேச ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக டாக்காவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா விரைவில் லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ராணுவ ஜெனரல் வாகர்-உஜ்-ஜமான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டை ஆள ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறினார். இடைக்கால அரசுக்கு ராணுவம் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
வங்காளத்தில் சலிமுல்லா கான் தலைமையிலான இடைக்கால அரசு
வங்காளத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் பிரதமராக சலிமுல்லா கான் செயல்படுவார் என்றார். 10 பேர் கொண்ட அமைச்சரவையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல்கள் உள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர்
ஷேக் ஹசீனாவின் வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த அனைத்தையும் சூறையாடினர். பிரதமர் இல்லத்தில் போராட்டக்காரர்கள் படுக்கைகள் மற்றும் இருக்கைகளில் ஓய்வெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், பிரதமர் இல்லத்தில் இருந்து சிலர் உடைமைகளை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
Discussion about this post