இஸ்மாயில் ஹனியேவின் மரணத்திற்குப் பிறகு, புதிய ஹமாஸ் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், ஹமாஸ் 251 பணயக்கைதிகளை இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு கடத்தியது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது.
எவ்வாறாயினும், 110 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் உட்பட 39,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) கடந்த 31ஆம் தேதி ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியே, டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், இஸ்மாயில் ஹனியே இறந்ததை அடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு புதிய தலைவரை அறிவித்துள்ளது. அதன்படி ஹமாஸ் ஆயுதக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா பகுதிப் பிரிவின் தலைவராக மட்டுமே பணியாற்றிய யாஹ்யா சின்வார் முழு ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக் குழுவில் யாஹ்யா ஷின்வார் முக்கியப் பிரமுகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post