வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் டாக்காவை விட்டு வெளியேறினார்.
ஹசீனாவின் ராஜினாமாவுடன், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்துடன் தாங்கள் நிற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், வங்கதேச இடைக்கால அரசுடன் அமெரிக்க அரசு தொடர்பில் உள்ளது.இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார்.இடைக்கால அரசு ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வங்காளதேச மக்களின் எதிர்காலம்.”
Discussion about this post