வங்கதேச உச்ச நீதிமன்றத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. நெருக்கடி காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ள அவர், வேறு நாட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ராஜினாமாவைத் தொடர்ந்து, வங்கதேச ராணுவம் பொறுப்பேற்றது.
தேர்தல் நடத்தி புதிய அரசு அமையும் வரை நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்துள்ளார். இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். அந்நாட்டு சட்டப்படி வங்கதேசத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இடைக்கால அரசாங்கமே நாட்டை வழிநடத்தும். எனவே இடைக்கால அரசை அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக தொடங்கியது. அதிபருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வில், மாணவர் பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகித்தனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் மாணவர் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று முகமது யூனுசும் இடைக்கால அரசுக்கு தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். ராணுவமும் அதை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக 84 வயதான முஹம்மது யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
ஆனால் வங்கதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அனைத்து இடங்களிலும் முஸ்லிம்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், இன்று பங்களாதேஷ் உச்ச நீதிமன்றத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்தில் பிரதம நீதியரசர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
Discussion about this post