ஒரு கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் 10 சதவீத மக்கள் தங்கள் வருமானத்தை ஈடுகட்ட பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் மக்கள் தொகை சுமார் 24 கோடி. அவர்களில் பலர் கடும் நெருக்கடியில் உள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 56 சதவீதம் பேர் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்த பிறகு சேமிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில், கடந்த ஆண்டில் 14 சதவீத நகரவாசிகள் அளவுக்கு நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் நகர்ப்புற மக்களில் 74 சதவீதம் பேர் தாங்கள் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு மாதச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மே மாதத்தில் 60 சதவீதமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை கூட நிறுத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. 40 சதவீதம் பேர் உறவினர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுமார் 10 சதவீதம் பேர் வருமானத்தை ஈட்டுவதற்காக பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
Discussion about this post