அமெரிக்காவில் சுறாமீன் தாக்கியதில் சிறுமியின் கால் துண்டிக்கப்பட்டது.
ஹோண்டுராஸ் நாடு மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள இந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏராளமான நீச்சல் பயிற்சிகள் மற்றும் நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கொலராடோ மாகாணத்தை சேர்ந்த அன்னாபென் கார்ல்சன் என்ற 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் ஹோண்டுராஸில் உள்ள பெலிஸ் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த நீச்சல் போட்டியிலும் பங்கேற்றார்.
அப்போது அன்னாபென் கார்ல்சன் திடீரென சுறாவால் தாக்கப்பட்டார். இதனால் நிலைகுலைந்த அச்சிறுமி கடுமையாக போராடி சுறா பிடியில் இருந்து மீண்டார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
எனினும், சம்பவத்தில் சிறுமியின் வலது கால் துண்டிக்கப்பட்டது. அன்னாபென் கார்ல்சன் என்ற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பெலிஸின் கடலோரப் பகுதியில் சுறா தாக்குதல்கள் மிகவும் அரிதான நிகழ்வு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post