பாகிஸ்தானில் தேசியக் கொடி விற்பனை செய்யும் கடை மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலுசிஸ்தானின் குவெட்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தானின் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே, பாகிஸ்தானின் தேசியக் கொடியை விற்கக் கூடாது என கிளர்ச்சிக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையையும் மீறி நேற்று தேசிய கொடி விற்பனை செய்யும் கடை மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
Discussion about this post