உரிய நடைமுறை இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் ஊழியர் ரூ. 5 கோடி நஷ்டஈடு வழங்குமாறு எலோன் மஸ்க்கிற்கு அயர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த 2022ம் ஆண்டு உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார்.இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. பல ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரூனி 2013ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் நிறுவனத்தில் ‛X‛ இணையதள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நவம்பர் 2022 இல், ரூனி திடீரென எந்த காரணமும் தெரிவிக்காமல் மின்னஞ்சல் மூலம் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ரூனி அயர்லாந்தில் உள்ள பணியிட உறவு ஆணையம் என்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். உரிய விசாரணையின்றி அவரை பணிநீக்கம் செய்த எலோன் மஸ்க்கின் ‛X‛ இணையதளத்துக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
Discussion about this post