பயங்கரவாதி ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடா தொழிலதிபர் தஹவுர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அங்கு சிறையில் இருக்கும் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியது.
தீவிரவாதி ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க-இந்தியா நாடு கடத்தல் ஒப்பந்தம் ராணாவை நாடு கடத்த அனுமதிக்கிறது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்.
Discussion about this post