ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்தது.
ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலையில், நிலநடுக்கத்தின் மையம் ரஷ்யாவிலிருந்து கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும், 50 கிலோமீட்டர் ஆழத்திலும் அமைந்திருந்தது, அதைத் தொடர்ந்து லேசான அதிர்வுகள் பதிவாகின.
நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்ததாகவும், அதில் இருந்து வெளியேறிய சாம்பல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Discussion about this post