இஸ்ரேலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் வெடிகுண்டை எடுத்துச் சென்றிருக்கலாம் என ஜெனரல் பெரிட்ஜ் அமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஹலேஹி தெருவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பலனின்றி அவர் உயிரிழந்தார். மாவட்ட கமாண்டர் பெரிட்ஜ் அமரின் கூற்றுப்படி, இறந்தவர் வெடிகுண்டை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குண்டுவெடிப்பில் பலியானவரை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை, என்றார்.
இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா? என முழு விசாரணைக்கு முன் கூற முடியாது. எனினும், வெடிகுண்டு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதை அமர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த நபரை அடையாளம் காண்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post