சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீராங்கனை புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.
இருவரும் ஆராய்ச்சியை முடித்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 80 நாட்களாக சிக்கியுள்ளனர், அவர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்ப உள்ளது.
இந்நிலையில், விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா மற்றும் புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளிக்கு சென்று 8 நாட்கள் ஆராய்ச்சி செய்த இருவரும் தற்போது 8 மாதங்கள் விண்வெளியில் தங்கியுள்ளனர்.
போயிங்கின் ஸ்டார்லைனரில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா மற்றும் புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரூ டிராகனில் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
Discussion about this post