புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை ஒட்டிய இந்த நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனிடையே அந்நாட்டில் அல்-கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள்
பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினருக்கு உதவ அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புர்கினா பாசோவின் பர்சலோகோ மாகாணத்தில் உள்ள கயான் நகருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Discussion about this post