எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதலை நடத்தப்போவதாக ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது.
எவ்வாறாயினும், 110 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில், ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில், ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு ஏமனில் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் நேற்று லெபனானில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் மீது ஏவினார் ஹிஸ்புல்லா. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதலை நடத்தப்போவதாக ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹிஸ்புல்லா ஆயுதப் படையின் தலைவர் ஹசன் நஹ்ருல்லா கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணை அல்லது துல்லியமான தாக்குதல் ஏவுகணையைப் பயன்படுத்தும் எண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்’ என்றார்.
Discussion about this post