பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து 23 பயணிகளை சுட்டுக் கொன்றனர். முசகேல் மாவட்டத்தில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பயணிகளை பயங்கரவாதிகள் இறக்கிவிட்டு சரமாரியாக சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post