அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய மருத்துவர் ரமேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்
டாக்டர்.ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி ஆந்திரப் பிரதேசம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியவர் ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி. இவர் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவர். அவருக்கு 38 வருட மருத்துவ அனுபவம் உள்ளது, அவசர மருத்துவம் மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்த அவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். டஸ்கலூசா நகரில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மருத்துவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில், உள்ளூர் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
Discussion about this post