ஜெர்மனியில் பஸ்சில் சக பயணிகளை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேர்மனியின் North Rhine-Westphaliaவில் உள்ள Siegen என்ற இடத்தில் நேற்று மாலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, பேருந்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து சக பயணிகளை கத்தியால் தாக்கினார். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் போதைக்கு அடிமையானதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
மேற்கு ஜேர்மனியின் சோலிங்கனில் நேற்று நடைபெற்ற திருவிழா ஒன்றில் சிரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 67 மற்றும் 56 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 56 வயதுடைய ஒரு பெண் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். அது ஐ.எஸ்.ஐ.எஸ். இது தீவிரவாத தாக்குதல் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். எனினும், அதற்கான ஆதாரம் இல்லை.
Discussion about this post