ரஷ்யாவில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற எம்ஐ-8 ஹெலிகாப்டர் மாயமானது.
ரஷ்யாவில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான ஹெலிகாப்டர் எம்ஐ-8 வகையைச் சேர்ந்தது.
இந்த 2 எஞ்சின் ஹெலிகாப்டர் 1960களில் வடிவமைக்கப்பட்டது. இந்த வகை ஹெலிகாப்டர் ரஷ்யாவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Discussion about this post