உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்தியது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது:
உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியது என்றார்.
இதற்கிடையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனமான’ செயல் என்று கண்டித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
Discussion about this post